யாழில் அரச பேருந்தில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் மரணம்!
யாழில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது அரச பேருந்து மோதியதில் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார்.
ஊர்காவற்துறை, புளியங்கூடல் தெற்கு பகுதியை சேர்ந்த குருசாமி கணேசலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 22 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் ஊர்காவற்துறை - பாலக்காட்டு சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது வீதியை கடந்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை
இந்நிலையில் வேகமாக வந்த அரச பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
பின்னர் 22ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று காலை 8.00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
