கிண்ணியாவில் மோட்டார் சைக்கிளுடன் வான் மோதி விபத்து! ஒருவர் படுகாயம்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா துறை அடி சந்தியில் வானும் மோட்டார் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த விபத்தானது இன்றையதினம்(3.1.2026) கிண்ணியா துரையடி வீதியிலிருந்து திருகோணமலை_மட்டக்களப்பு பிரதான வீதிக்கு செல்லும் சந்தியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், காயத்துக்கு இலக்காகியவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வாகனங்களை கைப்பற்றி கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பியுள்ளனர்.

மோட்டார் வண்டி பலத்த சேதத்துக்கு உள்ளாகி காணப்படுவதுடன் வானின் முற்பகுதியும் கடுமையாக சேதத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
[ZZGSNI1
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan