கிண்ணியாவில் விபத்து: இளைஞன் படுகாயம்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சகொடித்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்றையதினம்(21.1.2026) இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரே காலில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

காயமடைந்த இளைஞன் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலைமறைவாகியுள்ள சாரதி
விபத்து இடம்பெற்றவுடன் முச்சக்கர வண்டியின் சாரதி அவ்விடத்திலிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான வாகனங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள சாரதியை கைது செய்ய கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri