பாரியளவில் மோட்டார் சைக்கிள் களவாடும் கும்பல் கைது
இலங்கையில் பாரிய அளவில் மோட்டார் சைக்கிள்களை களவாடும் கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் பெருமதியான மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்த செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் மோட்டார் சைக்கிள் திருத்துபவர்கள் எனவும் இருவர் மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேக நபர்கள் களவாடிய மோட்டார் சைக்கிள்களின் பாகங்கள், கொள்ளை இடுவதற்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி என்பனவும் சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய முன்னாள் ராணுவ சிப்பாயான களுத்துறை பொம்புல புஸ்கொட்டா என்ற நபர் இந்த மோட்டார் சைக்கிள் கொள்ளை கும்பலை வழி நடத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
