மோட்டார் சைக்கிள் கொள்ளை: மூவர் கைது
மட்டக்களப்பு - ஊறணி பகுதியில் மோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புபட்ட மூவரைக் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப் பகுதிக்குட்பட்ட ஊறணி பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிள் ஒன்று கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண்னொருவரையும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri