கிளிநொச்சியில் தொடருந்துடன் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு
கிளிநொச்சி- பாரதிபுரம் பகுதியில் தொடருந்துடன் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (25) காலை 12 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையினை குறித்த நபர் கடக்க முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழப்பு
சம்பவத்தில் பொன்னழகு அனுசன்ராஜ் என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தொடருந்து சுமார் 30 நிமிடங்கள் வரை அப்பகுதியில் தரித்து நின்றதுடன், சடலம் உறவினர்களால் பொறுப்பேற்ற பின்னர் யாழ் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
பிரதேச மக்கள் விசனம்
விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள தொடருந்து கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை முறையாக இயங்குவது இல்லை என பிரதேச மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
தானியங்கி சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்படும் கோளாறுகளால் பல உயிர்கள் காவுகொள்ளப்படுவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
