லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தந்தையும் மகனும் பலி
கொழும்பு ஹைலெவல் வீதியில் கொஸ்கம, மிரிஸ்வத்த பிரதேசத்தில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற வீதி விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (8) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது கொஸ்கம பிரதேசத்தை சேர்ந்த 44 வயது தந்தை மற்றும் 8 வயது மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் சக்கரமொன்று திடீரென வெடித்ததில் , லொறி வீதியை விட்டு விலகி எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்த தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan