லொறி மீது மோதிய மோட்டார் சைக்கிள் : ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் 48ஆவது கிலோமீற்றர் மைல்கல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், கண்டியில் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துநர் நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
