யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! - இளைஞன் படுகாயம்
கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜுவத்த பிரதேசத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து இன்றிரவு (23) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மயிலவெவ- புபுதுபுர பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு படை வீரரான எஸ்.சமரநாயக்க (28வயது) படுகாயமடைந்துள்ளார்.
குறித்த இளைஞர் வயலுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது பிரதான வீதியின் ஊடாக யானை குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் யானையுடன் மோதியதாகவும் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த இளைஞர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 13 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan