காத்தான்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : ஸ்தலத்திலேயே இளைஞர் பலி
காத்தான்குடி(Kattankudy) பிரதான வீதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை கடப்பதற்கு நின்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (13.08.2024) இரவு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரா பாலிகா பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரதே பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்து வந்து மற்றுமொரு இளைஞர் காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் குறித்த விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
