நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் காயம்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தனியார் பேருந்து ஒன்றுடனும் ,கார் ஒன்றுடனும் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (25 ) காலை ஹட்டன் பிரதான வீதியின் கெலேகால பகுதியில் இடம்பெற்றுள்ளது.
செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற தனியார் பேருந்து ஒன்றுடன் மோதி கெலேகால பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடனும் மோதியதில் வீதியில் குடைசாய்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இருவர் காயம்
குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 23 மணி நேரம் முன்

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
