நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்
நுவரெலியா - நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (07.03.2024) பிற்பகல் நுவரெலியா பிரதேச சபைக்கு முன்பாக லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மோட்டார் சைக்கிள் சாரதி மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
இதற்கமைய லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் உள்ள வாகன பழுது நீக்கும் கடையில் லொறியின் சில்லுக்கு காற்று நிரப்பிக்கொண்டு நுவரெலியாவை நோக்கி சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்ய உத்தரவிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்... மாஸ் போங்க Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
