கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இளம் குடும்பஸ்தர் பலி
கிளிநொச்சி வேரவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பூனகரி பிரதேசத்துக்குட்பட்ட வேரவில் பிரதான வீதியில் நேற்று (15-10-2023) உழவு இயந்திரம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான
இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் முழங்காவில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்ட நிலையில் அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தை
பூநகரி வலைப்பாட்டைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய சிதம்பரநாதன் வர்மகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் ஜெயாபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
