மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாற்பண்ணை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய பாலசேகர் ஹரிபிரசாத் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துச் சம்பவம்
குறித்த நபர் கடந்த 15ஆம் திகதி முல்லைத்தீவில் உள்ள கோவில் ஒன்றுக்கு நாதஸ்வர கச்சேரிக்கு சென்றுள்ளார்.
பின்னர் 16ஆம் திகதி வீடு திரும்பும் வேளை சாவகச்சேரியில் உள்ள பாடசாலை ஒன்றின் மதில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்நிலையில், அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(25) மாலை உயிரிழந்துள்ளார்.
மேலும் , அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
