ஓய்வுபெற்ற அதிபர் மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபப் பலி! கிளிநொச்சியில் பெரும் துயரம்
புதிய இணைப்பு
கிளிநொச்சி - ஏ - 9 பிரதான வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற கோர வீதி விபத்தில், ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பெருமாள் கணேசன் என்பவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
ஓய்வுபெற்ற அதிபர் பெருமாள் கணேசனின் திடீர் மறைவு, கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளில் அதிபராகவும், ஆசிரியராகவும் பணியாற்றி ஆயிரக்கணக்கான மாணவர்களைச் சிறந்த நிலைக்கு உயர்த்திய பெருமைக்குரியவர் பெருமாள் கணேசன், ஓய்வுபெற்ற பின்னரும் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகளில் அவர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ராகேஷ்
முதலாம் இணைப்பு
கிளிநொச்சியில் தன்னுடைய வழக்கமான நடைபயிற்சியை முடித்து விட்டு வீடு திரும்பிய அதிபர் மீது, வேகமாக வந்த மோட்டார் வாகனம் ஒன்று மோதியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வழக்கமாக தன்னுடைய நடைபயிற்சியை முடித்து வீடு திரும்பிய அதிபர் ஒருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞர்கள் மோதியுள்ளனர்.
அதிபர் படுகாயம்
இந்த விபத்தில் படுகாயமடைந்த அதிபர் தற்போது, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கை பெற்று வருகிறார்.

கடந்த சில நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக செல்லும் இளைஞர்களால் பல விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
இதன்போது சில உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், போக்குவரத்து பொலிஸார் சட்டத்தையும், நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.