யாழில் அயல் வீட்டு சண்டையில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கொடூரம்
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், நேற்று(22.06.2026) இடம்பெற்றுள்ளது.
கத்திக்குத்து மோதல்
குறித்த குடும்பஸ்தர் மீதான தாக்குதலின் பின்னர் அவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று(23) அயல் வீட்டில் உள்ளவருக்கும், குறித்த குடும்பஸ்தருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருவர் மற்றையவர் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.