பதுளையில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி
பதுளை - பண்டாரவளை வீதியில் ஹால்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வெல்லவாய, கல்போக்க, பெரகெட்டியவைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி நபர் பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
லொறி மோதியதில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி, அருகிலுள்ள தொலைபேசிக் கம்பத்தில் மோதியதால், கம்பம் சரிந்து வீழ்ந்தது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் சடலம் தெமோதர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லொறியின் சாரதி எல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)