நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள தேசபந்துவை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை
தேசபந்து தென்னக்கோனைப் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்தார்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகருக்குச் சமர்ப்பித்துள்ள பிரேரணை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு சபாநாயகருக்குப் பிரேரணை கையளிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் பிரேரணையில் அவரது தவறான நடத்தை, பதவியைத் தவறான முறையில் பயன்படுத்தியமை, அவர் தனது பொலிஸ்மா அதிபர் பதவியை பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை, அவர் தனது பதவிக்காலத்தில் முறையற்ற விதத்தில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
2022ஆம் ஆண்டும் 5ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் உயர் பதவியில் இருக்கின்ற அரச அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான யோசனையாகவே இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.
அரச பதவியைத் தவறான முறையில் பயன்படுத்திய ஒரு நபரே தேசபந்து தென்னக்கோன். இந்நிலையில், அவருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்படும் பிரேரணை வாக்கெடுப்பின் பின்னர் நிறைவேற்றப்பட்ட இருக்கின்றது" என்றார்.
புதிய இணைப்பு - ராகேஸ்
முதலாம் இணைப்பு
தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணையில் அவரது தவறான நடத்தை, பதவியைத் தவறான முறையில் பயன்படுத்தியமை, பொலிஸ்மா அதிபர் பதவியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
விசேட குழுவை நியமிக்கும் பிரேரணை
2022ஆம் ஆண்டும் 5ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் உயர் பதவியில் இருக்கின்ற அரச அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான யோசனையாகவே இந்த பிரேரணை இன்று நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான விசேட குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று விவாதம் இன்றி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சத்யாவிற்கு ஊசி போடப்போன சிட்டி, முத்துவிற்கு வந்த போன், பிறகு.. சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் புரொமோ Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
