கெஹலியவைப் பாதுகாக்க அரசு கடும் பிரயத்தனம்
செப்டெம்பர் முதல் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது ஆளுங்கட்சியினர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாடுகளில் தங்கியிருக்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்களை செப்டெம்பர் 5 ஆம் திகதிக்குள் நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு..
ஆளுங்கட்சி பிரதமர் கொறடா அலுவலகம் ஊடாக இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை செப்டெம்பர் 5 முதல் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. செப்டெம்பர் 7 அல்லது 8 ஆம் திகதிகளில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
எனவே, அந்தப் பிரேரணையை தோற்கடிப்பதற்கும், ஆளுங்கட்சியின் ஒற்றுமையை
வெளிப்படுத்துவதற்கும் ஆளுங்கட்சியினர் கட்டாயம் சபையில் இருக்க வேண்டும்
என்று பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam