சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று(05.03.2024) நாடாளுமன்றில் எதிரணியினரால் கையளிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் நியமனம்
இதன்போது நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த பரிந்துரைகள் சில உள்வாங்கப்படாமல் அது நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும், அதில் கையொப்பமிட்டு சபாநாயகர் அரசமைப்பையும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறியுள்ளார் எனவும் எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும், பொலிஸ்மா அதிபர் நியமனம் கூட அரசியலமைப்புக்கு முரணாகவே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |