நீர்கொழும்பு சிறைச்சாலை வெடித்த மோதல்: நீதி அமைச்சர் மீது அதிருப்தி தெரிவித்த எதிர்க்கட்சிகள்
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை(21.07.2026) செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் தொடர்ச்சியான சம்பவங்களை மையப்படுத்தியே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
இந்தச் சம்பவம் தொடர்பில் அரசு பொறுப்புடன் செயற்படவில்லை என்றும், நீதி அமைச்சரின் நடவடிக்கைகள் திருப்தியற்றவை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. ஜூலை மாதத்துக்கான நாடாளுமன்ற அமர்வுகள் நாளை(21) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(24) வரை நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், நாளை பிரேரணையைச் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை கையளிக்க முடியாவிட்டால், இந்த நாடாளுமன்ற வாரத்துக்குள்ளேயே நிச்சயம் கையளிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அவசரமானதாகக் கருதி, நாடாளுமன்றத்தில் விரைவாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு சபாநாயகரை வலியுறுத்தவும் ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
எயார்பஸ் விவகாரம் - பணம் கைமாற்றப்பட்ட வங்கிக்கணக்குகளை கண்டுபிடிக்க அவுஸ்திரேலியா புறப்படும் முக்கிய குழு