அடுத்தடுத்து வெளியாகும் ஊழல் குற்றச்சாட்டுகள்... மகிந்த தரப்பிலிருந்து NPP-க்கு ஆதரவு..!
இலங்கையில் தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றோம் என்றால் அதற்கான வேலைகளை செய்தவர் மகிந்த ராஜபக்ச என்றும், தற்போது நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அநுர என்றும் அக்குறணை பிரதேசம் அரசியல் செயற்பாட்டாளர் ரியாஷ் அகமர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் மகிந்தவுடன் இணைந்து அரசியல் செய் வந்த பொழுது, எனக்கு சரியானதொரு வாய்ப்பு வழங்கப்படாமல் ஏமாற்றமே கிடைத்தது.
ஆகையால் மக்களுக்கு சேவை செய்வதற்காக தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்துள்ளேன். இலங்கை நாட்டில் தற்போது மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் மகிந்த தான்.

அதே போன்று, அப்போதைய ஆட்சிகளில் நடந்த ஊழல் குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டியவர் என்றால் அது அநுர தான். நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறும் பொழுது, மக்களுக்கு தேவையான அனைத்தையும் கலவரம் இல்லாமல் அநுர குமார திஸாநாயக்க செய்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று தான் நானும் நினைக்கின்றேன். ஒன்றும் இல்லாத அரசியல்வாதிகளை பற்றி நான் பேச விரும்பவில்லை. ராஜபக்சர்கள் ஆட்சிக் காலங்களில் ஊழல்வாதிகள் என்ற பெயரில் ஒரு சிலரே அகப்பட்டார்கள் என்றார்.