சுகாதார அமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி நம்பிக்கையில்லா யோசனையில் நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சுகாதாரத்துறையின் நெருக்கடிக்கு தற்போதைய சுகாதார அமைச்சரே பொறுப்பாவார்.
ஒவ்வாமை மற்றும் நோயாளிகளின் வெளிப்படையான மரணத்திற்கு காரணமான பதிவு செய்யப்படாத மருந்துகளைப் பயன்படுத்த அனுமதித்தவர் என்பதால், அவர் மீது நாடாளுமன்றத்திற்கு நம்பிக்கை இல்லை என்று இந்தப் பிரேரணை கூறுகிறது.
எனினும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தாம் தயாராகவே இருப்பதாக அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |