சபாநாயகருக்கு எதிரான பிரேரணை குறித்து ஆராயப்பட்டு வருகின்றது - ரஞ்சித் மத்தும பண்டார
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் உரிய நேரத்தில் வரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று (28.01.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கலந்துரையாடல்
இது தொடர்பில் அனைத்து எதிரணிகளுடனும் கலந்துரையாடப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
மத்திய கிழக்கில் திக் திக் நிமிடங்கள் - வெனிசுலாவை விட பெரிய தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பகிரங்க மிரட்டல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய உரிமை மீறல், பாரபட்சம் உட்பட சில காரணங்களை அடிப்படையாக கொண்டே பிரேரணை முன்வைப்பது குறித்து கலந்துரையாடப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசின் தேவைக்கேற்ப பிரேரணைகளைக் கொண்டுவருவதற்கு தாம் தயாரில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |