மகனின் அடகு கடையில் கொள்ளையிட்ட தாய்
ராகமை நகரிலுள்ள நகை அடகு கடையொன்றில் கொள்ளையிடப்பட்ட நகைகள் மற்றும் பணத்துடன் ஐந்து சந்தேக நபர்களை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களில் அடகு கடை உரிமையாளரின் தாயும், காசாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ஐந்து சந்தேக நபர்களும் ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிசிரீவி காட்சி
இந்நிலையில் குறித்த கொள்ளைச் சம்பவம் உரிமையாளரின் தாய் மற்றும் அடகு கடையின் காசாளர் ஆகியோரின் ஒத்துழைப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அங்கு இருந்த சிசிரீவி கருவி அமைப்பை கொள்ளையர்கள் செயலிழக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, சிசிரீவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
