யுத்தத்தில் காணாமல்போன மகனை தேடும் தாய்! வறுமையில் தண்ணீரை குடித்து வாழும் அவலநிலை(Video)
நாட்டை இன்று ஆட்டிப்படைக்கும் வறுமை பொருட்களின் விலையேற்றம் தொழில் வாய்ப்பின்மை என்பன சாதாரண மக்களிடையே பல தரப்பட்ட நெருக்கடி நிலையை தோற்றுவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் எவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் கனிசமான குடும்பங்கள் தொடர்ந்தும் வறுமை நிலையினையே எதிர் நோக்கி வருகின்றன.
கிளிநொச்சி மேற்கு பிரதேசமான அக்கராயன் குளம் கோணாவில் ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளில் அதிகளவான குடும்பங்கள் வறுமையிலேயே வாழ்ந்து வருகின்றன.
இவ்வாறானவர்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவுகள் முதியோர் கொடுப்பனவுகள் எனப்பல உதவிகள் கிடைத்தாலும் அவற்றை கொண்டு ஒரு வாரகாலமாவது சமாளிக்க கூடியதாகவே இருக்கின்றது என குறிப்பிடுகின்றனர்.
அக்கராயன் பகுதியில் உள்ள கெங்காதரன் குடியிருப்பு பிரதேசத்தில் வசித்து வரும் சின்னத்தங்கச்சி என்பவர் இது தொடர்பில் குறிப்பிடுகையில்,



