யாழில் தீக்காயங்களுடன் பெண் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – கட்டைக்காடு, முள்ளியானை பகுதியில் எரிகாயங்களுக்குள்ளான 2 பிள்ளைகளின் தாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கணவன் அடுப்படியில் பெற்றோல் போத்தலை வைத்துள்ளதாகவும், இதை அறியாமல் தீக்குச்சியை அணைக்காமல் போட்டதால் தீ பற்றியுள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டைக்காடு, முள்ளியானைச் சேர்ந்த யோகேஸ்வரன் பாலரஞ்சிதா (வயது- 32) என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி எரிகாயங்களுக்கு உள்ளான அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 5 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் நேற்று காலை உயிரிழந்தார்.
இதன்போது,இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இன்று மேற்கொண்டுள்ளார்.
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
தமிழ்நாட்டில் இல்லை.. முக்கிய இடத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஜனநாயகன்.. வசூல் வேட்டை Cineulagam
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan