மின்சார வேலியில் சிக்கி இரு பிள்ளைகளின் தாய் மரணம் (Video)
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சுரங்கப்பாதைக்குக் கீழ் உள்ள சாந்த ஜனபதய எனும் பகுதியில் வீட்டிற்குப் பின்புறத்தில் மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தாய்யொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (09.12.2021) மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஏ.எம்.சந்திரலதா வயது 48 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டார்கள் தங்களது மரக்கறி தோட்டத்தை மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்சார வேலியைச் சட்டவிரோதமாகப் பொருத்தியுள்ளனர்.
குறித்த பெண் ஒவ்வொரு நாளும் தோட்டத்திற்குச் செல்லும் போது மின்சாரத்தைத் துண்டித்துவிட்டுச் செல்வதாகவும், இன்றையதினம் அதனைத் துண்டிக்காது மறந்து சென்றதனால் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனப் பிரதேச வாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் நீதவானின் மேற்பார்வையின் பின் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.



பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan