கனடாவில் விபத்தில் கொல்லப்பட்ட யாழ் தமிழர்கள் - உயிருக்கு போராடும் தாய்
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்க்கம் நகரில் டெனிசன் வீதிக்கு தெற்கே மார்க்கம் வீதி மற்றும் எல்சன் வீதியின் சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புதன் கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரக் வண்டி ஒன்றும் கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் 52 வயதான பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த விபத்தில் 21 வயது மகனும், 23 வயது மகளும் இருவரும் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் இணுவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
46 வயதான ட்ரக் வண்டியின் சாரதிக்கு காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த விபத்தை அடுத்து அந்த பகுதியில் உள்ள வீதிகள் அனைத்து நீண்ட நேரம் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான சாட்சிகளை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் தெரிந்தவர்கள் யார்க் பிராந்திய காவல்துறையின் முக்கிய விசாரணைப் பிரிவை 1-866-876-5423, ext என்ற எண்ணில் அழைக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.
YOU MY LIKE THIS VIDEO