மூங்கிலாறு சிறுமி படுகொலை! - தாய், தந்தை, சகோதரி கைது
12 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த புதுக்குடியிருப்பு பொலிஸார், கொலைச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, தாய், சகோதரி மற்றும் மைத்துனர் உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி புதுக்குடியிருப்பு உடையார்கட்டில் 12 வயது சிறுமி காணாமல் போனதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பின்னர், டிசம்பர் 18ம் திகதி சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது மற்றும் பிரேதப் பரிசோதனையில் சிறுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் தந்தை, தாய் மற்றும் 21 வயதுடைய சகோதரி ஆகியோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சந்தேக நபர்கள் கொலையை திசை திருப்புவதற்காக பொலிஸ் அதிகாரிகளை தவறாக வழிநடத்த முற்பட்ட போதிலும், சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்து சில நாட்களில் சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுமியின் மைத்துனர் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 2022 ஜனவரி 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார், ஏனைய குடும்ப உறுப்பினர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய
பொலிஸார் இவர்களை 48 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய
நிலையில் விடயங்களை கேட்டறிந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி
ரி சரவணராஜா இவர்களை 48 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
வழங்கியுள்ளார்.