மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் பலி!
மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் காட்டு யானைத் தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (02.05.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
திக்கோடை,சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மேலதிக விசாரணை
நான்கு பிள்ளைகளின் தாயான இவர், இன்று அதிகாலை தனது வீட்டு வளவிற்குள் சத்தம் வருவதை கேட்டு வெளியில் வந்தபோது அங்கு நுழைந்த காட்டு யானை திடீரெனத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
போரதீவுப்பற்று எல்லைக் கிராமங்களில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில், இன்றைய இந்தச் சோகமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan