தந்தையை பழிவாங்க தாய் செய்த மோசமான செயல் அம்பலம்
கொழும்பில் தனது நான்கு வயது மகனை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தந்தை விடுவிக்கப்பட்டுள்ளார்.
தந்தைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிமன்றம், தந்தையை விடுதலை செய்துள்ளனர்.
சட்டத்தரணி தர்ஷன குருப்பு முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி, குழந்தையைப் பயன்படுத்தி தனது கட்சிக்காரருக்கு எதிராக பொய்யான முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான முறைப்பாடு
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு மகன் அளித்த வாக்குமூலத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி தனது சாட்சிக்காரருக்கு எதிராக பொய்யான முறைப்பாட்டை பதிவுசெய்ய மகனை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
எனினும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரதியில் இந்த விடயம் குறிப்பிடப்படவில்லை.
சிறைத்தண்டனை
4 வயது மகன் தந்தைக்கு எதிராக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் வாக்குமூலம் வழங்கி, தவறான முறையில் சமர்ப்பிக்கப்பட்டு, அவ்வாறான ஆவணத்தின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட தந்தை 02 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.
இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரிட்டோ ஹேமந்த என்ற தந்தை இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.