சங்கிலி அறுத்தவர்களை விரட்டியடித்த இளம்தாய்: யாழில் பரபரப்பு சம்பவம்
யாழ்.கொடிகாமத்தில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம்தாய் ஒருவரை தள்ளி விழுத்திவிட்டு சங்கிலியை அபகரித்தவர்களை குறித்த இளம்தாய் விரட்டி அடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று(26.10.2023) இ்டம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சங்கிலியை அபகரித்த கொள்ளையர்கள் ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிளைக் கைவிட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக கூறப்படகிறது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
முன்பள்ளியில் இருந்து மகளை ஏற்றிக்கொண்டு கொயிலாமனை, அண்ணமார் கோவிலடியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளம் தாயை வழிமறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் நபர் ஒருவரின் பெயரைச் சொல்லி வினாவியுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
அவரை எனக்குத் தெரியாது என்று கூறி விட்டு குறித்த இளம் தாய் பயணிக்க எத்தனித்த போது மோட்டார் சைக்கிளுடன் தள்ளி கீழே வீழ்த்திவிட்டு அவரின் கழுத்தில் அணிந்திருந்த முக்கால் பவுன் மதிக்கத்தக்க தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
உடன் சுதாகரித்துக் கொண்ட அந்த இளம்தாய், உடனேயே எழுந்து மோட்டார் சைக்கிளில் சத்தமிட்டவாறே துரத்திச் சென்றுள்ளார்.
இதையடுத்து வீதியால் பயணித்தவர்கள் திருடர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது, அவர்கள் மோட்டார் சைக்கிளைக் கைவிட்டுவிட்டு தப்பித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூ றப்படுகிறது.
மேலும், திருட்டுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் சுன்னாகம் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam
