யாழில் 12 வயது சிறுவன் மீது தாயார் கொடூர தாக்குதல்!
யாழ்.கொடிகாமம் பகுதியில், 12 வயது மகனை வீட்டில் இருக்க வேண்டாம் என அடித்து விரட்டிய தாய் ஒருவர் நேற்றிரவு கொடிகாமம் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண்ணின் கணவன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காலமாகியுள்ள நிலையில், தனது மகனை வீட்டில் இருக்க வேண்டாம் என அடித்து விரட்டியுள்ளார்.
இந்நிலையில், அச்சிறுவன் நேற்று இரவு முழுவதும் வீதியிலேயே நின்றுள்ளதுடன், பின்னர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்று முறையிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து குறித்த தாயாரை கொடிகாமம் பொலிஸார் இன்று மதியம் கைது செய்ததுடன், மகனை பொலிஸ் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.
கடந்த 7ஆம் திகதியும் தாயார் இவ்வாறு தாக்கியதால் அச்சிறுவன் ஐந்து நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில்,சந்தேகநபரை நாளைய தினம் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri