இலங்கையில் பல பெண்களுக்கு ஆபத்தாக செயற்பட்ட இளைஞன்! விசாரணையில் சிக்கிய தாய்

Sri Lanka Police Puttalam Money Gold Arrest
By Vethu Mar 16, 2026 03:39 AM GMT
Report

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெண்களின் தங்கச் சங்கிலிகளை அறுத்து கொள்ளையிட்டு வந்த தனது மகனுக்கு உடந்தையாக இருந்த 53 வயதுடைய தாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்படும் நகைகளை அடகு வைத்து, அந்தப் பணத்தில் தனது மகனின் போதைப்பொருள் பாவனைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

வென்னப்புவ தலைமையக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 13ஆம் திகதி வடக்கு களுத்துறை பிரதேசத்தில் வைத்து இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

தங்க நகைகள் கொள்ளை

சந்தேகநபரான இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்து, வீதியில் செல்லும் பெண்களின் தங்கச் சங்கிலிகளை அறுத்து கொள்ளையிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இலங்கையில் பல பெண்களுக்கு ஆபத்தாக செயற்பட்ட இளைஞன்! விசாரணையில் சிக்கிய தாய் | Mother Arrested For Her Son S Robberies

அண்மையில் வென்னப்புவ தம்பரவில பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற 18 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுக்க முயன்றபோது, அங்கிருந்த இளைஞர் ஒருவர் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதன்போது, சந்தேக நபரான இளைஞனிடம் இருந்து 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணையில் அவர் ஏற்கனவே சங்கிலி அறுப்பு சம்பவங்களுக்காக விளக்கமறியலில் இருந்து அண்மையிலேயே பிணையில் விடுதலையானவர் என்பது தெரியவந்தது.

பொலிஸார் விசாரணை

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் கொள்ளையடிக்கும் தங்கச் சங்கிலிகளைத் தனது தாயிடம் ஒப்படைப்பதாகவும், தாய் அவற்றை அடகு வைத்துப் பெற்றுக்கொள்ளும் பணத்தை அவ்வப்போது தனது போதைப்பொருள் தேவைக்காகத் தருவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இலங்கையில் பல பெண்களுக்கு ஆபத்தாக செயற்பட்ட இளைஞன்! விசாரணையில் சிக்கிய தாய் | Mother Arrested For Her Son S Robberies

இதனையடுத்து கைது செய்யப்பட்ட தாயிடம் நடத்திய விசாரணையில், மகன் கொண்டு வந்து கொடுத்த நகைகளை அடகு வைத்த ஐந்து இடங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு அடகு வைக்கப்பட்ட சுமார் 10 தங்கச் சங்கிலிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

தற்போது தடுப்புக் பொலிஸ் உத்தரவின் கீழ் உள்ள சந்தேகநபரான இளைஞனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US