கோர விபத்தில் தாயும் மகனும் பரிதாப உயிரிழப்பு
தெவிநுவரை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மாத்தறை மாவட்டம், தெவிநுவரை பிரதேசத்தில் இன்று (13.1.2024) இரவு 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளும், பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதி கைது
இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற 42 வயதுடைய சுவேதிகா என்ற தாயும், 12 வயதுடைய தனுஷ்க என்ற மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
தனியார் வகுப்புக்குச் சென்ற மகனை மோட்டார் சைக்கிளில் தாய் ஏற்றிக்கொண்டு வீடு திரும்பியபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
