முச்சக்கர வண்டியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - தாயும், குழந்தையும் பலி
தெஹியத்தகண்டிய - மகியங்கனை வீதியில் முனுகமன பகுதியில் இன்று (17) பிற்பகல் பேருந்தும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் தாயும், மகனும் பலியாகியுள்ளனர்.
தெஹியத்தகண்டியவிலிருந்து மஹியங்கனை நோக்கிச்சென்ற பயணிகள் பேருந்து எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் தெஹியத்தகண்டியவைச் சேர்ந்த 33 வயதுடைய தாயும் அவரது 2 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் படுகாயமடைந்து தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்போது தாய் மற்றும் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.