கொழும்பில் மற்றுமொரு தாயும் மகளும் மாயம் - மக்களின் உதவியை நாடும் பொலிஸார்
மஹரகம, பத்திரகொட, விஹாரவத்த வீதியில் வசிக்கும் தாயும் மகளும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
23 வயதுடைய இஷாதி ரங்கிகா என்ற தாயும் 3 வயதுடைய ஹிமாஷி எனற் பெண் குழந்தையும் 8 நாட்களாக காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 19ஆம் திகதி முதல் தனது மனைவியும் மகளும் காணாமல் போயுள்ளதாக கணவர் மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மனைவி மாயம்
தாம் 19ஆம் திகதி காலை கிருலப்பனை பாமன்கடை பழக்கடைக்கு வேலைக்குச் சென்றதாகவும், அன்று இரவு 10.00 மணியளவில் வீடு திரும்பியபோது மனைவியும் மகளும் வீட்டில் இல்லை எனவும் சமிந்து திவங்க என அழைக்கப்படும் கணவர் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர், தெமட்டகொடயில் வசிக்கும் தாயாரிடம் மனைவி மற்றும் மகள் குறித்து கேட்டதாகவும், அவர்கள் வரவில்லை என கூறியதாக திவங்க குறிப்பிட்டுள்ளார்.
மஹரகம பொலிஸார்
சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாய் மற்றும் மகள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0112-850700 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு மஹரகம பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.