குழந்தை பிரசவிக்க தயாரான கர்ப்பிணி தாய் உயிரிழப்பு - இரத்த பரிசோதனையில் வெளியான தகவல்
களுத்துறை - வாதுவை பகுதியில் கர்ப்பிணி தாயொருவரும் சிசுவும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
முதலாவது மகப்பேறுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த நிலையில், குறித்த கர்ப்பிணி தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாதுவையை சேர்ந்த 34 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பரிசோதனையில் வெளியான தகவல்
குறித்த பெண்ணுக்கு கடந்த 24ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதன் மூலம் காய்ச்சல் தணிந்துள்ளது.

எனினும், மலச்சிக்கல் உபாதை காரணமாகவே அவர் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவிப்பதற்கான பரிசோதனைகளின் போது அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், குறித்த தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இடவசதி இல்லாத காரணத்தினால், அரச மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நிலைமை மிகவும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி குழந்தையும், 29ஆம் திகதி மாலையில் தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
குறித்த பெண் உயிரிழப்பதற்கு முன்னர் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தமை இரத்தப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
மஹர சிறைச்சாலை கலவரத்தை வழிநடத்திய பின்னணியில் 4 கைதிகள் - ஆய்விற்காக களமிறங்கும் முக்கிய அதிகாரிகள்