பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விருது பெற்ற இலங்கைத் தாதி
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதான தாதியர் பயிற்சி அதிகாரியான புஸ்பா ரம்யா டி சொய்சா, பிரித்தானிய நாடாளுமன்றம் மற்றும் உலகளாவிய வர்த்தக சபையின் 'உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க பெண்' என்ற இரண்டு சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.
அவர் இன்று (22.09.2023) காலை விருதுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளார்.
செல்வாக்கு மிக்க பெண்
இதன் போது கருத்துத் தெரிவித்த அவர், பொது சேவைக்கு வெளியே தனது தனிப்பட்ட செல்வம், நேரம் மற்றும் உழைப்பை தியாகம் செய்த தனது சேவைகளை பாராட்டியே இந்த விருதுகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இருந்து இந்த விருதுகளை பெற்றமை மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் புஸ்பா ரம்யா டி சொய்சா கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
