பஷர் அல்-அசாதின் ஊடக கணக்கில் இருந்து வெளியான முக்கிய செய்தி!
நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் தொடர்பில் “சிரிய பிரசிடென்சி டெலிகிராம்” கணக்கில் வெளியிடப்பட்ட செய்தியானது மத்தியகிழக்கின் கவனத்தை பெற்றுள்ளது.
நாட்டை விட்டு தாம் வெளியேறுவது திட்டமிடப்படாதது என குறித்த தளத்தில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அசாத் இன்னும் டெலிகிராம் கணக்கைக் கட்டுப்படுத்துகிறாரா என்பது தொடர்பில கேள்வி எழுந்துள்ளது.
அறிக்கை உண்மையானதாக
இந்த அறிக்கை உண்மையானதாக இருந்தால், இந்த மாதம் அவரது ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் நிகழ்வுகள் குறித்து அவர் பகிரங்கமாக கருத்து தெரிவித்தது இதுவே முதல் முறையாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“சிரியாவில் இருந்து நான் வெளியேறுவது திட்டமிடப்பட்டதோ அல்லது போராட்டங்களின் இறுதி மணிநேரங்களில் நடந்ததோ அல்ல.
அப்போது நான் டமாஸ்கஸில் இருந்தேன், டிசம்பர் 8, 2024 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை எனது கடமைகளைச் செய்தேன்” என செய்தி வெளியாகியுள்ளது.
ரஷ்யா சென்ற அசாத்
எனினும், டிசம்பர் 8 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை சிரியாவின் ஹ்மெய்மிமில் உள்ள விமானத் தளம் ஊடாக அசாத் ரஷ்யா சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த தளம் தாக்குதலுக்கு உள்ளானபோது அவரை வெளியேறுமாறு ரஷ்யா கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |