அறுகம் குடா பகுதிக்குள் ஊடுருவிய மொசாடின் விசேட திட்டம்
அம்பாறை, பொத்துவில், அறுகம் குடா(Arugam Bay) பகுதியில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என வெளியான அச்சுறுத்தல் செய்தியினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அறுகம் குடாவை மையப்படுத்தி 500 இற்கும் அதிகமான பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர், பொலிஸார், இராணுவத்தினர் சிறப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அறுகம் குடா பகுதி குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலை தொடர்ந்து திடீரென படைகளை சுற்றுலா பகுதியில் அரசாங்கம் களமிறக்கியுள்ளமை வெளிநாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற ஒருவருக்காக அமெரிக்கா இந்த திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில் தாக்குதல் தொடர்பில் வெளியான இந்த எச்சரிக்கை ஒரு அப்பட்டமான போலி செய்தி என இலங்கையின் தேசிய பாதுகாப்பு படையும் நிராகரித்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அறுகம் குடா பகுதிக்குள் மொசாட்(Mossad) விசேட திட்டமொன்றுடன் ஊடுருவியுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறுகம் குடா விவகாரம் தொடர்பில் இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம்.எம் .நிலாம்டீன் வெளியிட்ட உண்மைகளை அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
