மனிதர்கள் - காட்டு யானைகள் இறப்பு விகிதம் அதிகரிப்பு: வனவிலங்கு திணைக்களம்
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள் மற்றும் காட்டு யானைகளின் இறப்பு விகிதம் பெருமளவில் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது.
கடந்த வருடம் காட்டு யானைகளினால் 146 கிராம மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரத்தில் நேற்றைய தினம் (14.07.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
2021இல் குறைந்தது 375 காட்டு யானைகளும், 2022இல் 439 காட்டு யானைகளும் கொல்லப்பட்டுள்ளன.
பெருமளவில் சேதங்கள்
மின்சார பொறிகள், 'ஹக்கா பட்டாசு, வெடிக்கும் கருவி, கூரான பலகைகள் மற்றும் விஷம் வைத்து காட்டு யானைகள் கொல்லப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல காட்டு யானைகள் தொடருந்துகளில் சிக்கியதாகவும், பாதுகாப்பற்ற கிணறுகளில் மூழ்கியதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான செலவு மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும், 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒதுக்கீடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |