தீவிரமடையும் கோவிட் தொற்று - இன்று புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தயாராகும் அரசாங்கம்
நாட்டில் கோவிட் தொற்று அச்சுறுத்தல் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்றைய தினம் இலங்கையில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கோவிட் தொடர்பான முக்கிய கட்டுப்பாடுகளை அறிவிக்க இன்று அரசாங்கம் தயாராவதாக சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி களியாட்ட விடுதிகள், மதுபானசாலைகள், ஸ்பா உள்ளிட்டவை தொடர்பில் இன்றைய தினம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
இக்காலப்பகுதியில் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
