கைது செய்யப்பட்ட 10 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் - செய்திகளின் தொகுப்பு
மட்டக்களப்பு - கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று உத்தரவிட்டார்.
கடந்த மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில், லவக்குமார் உட்பட 10 பேர் அன்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தி, அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த நிலையில் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கல்குடா பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற அனுமதியுடன் 3 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் ராவணன் ஆதிமுத்துவாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் இவர்தான்.. புகைப்படங்கள் இதோ Cineulagam