ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் அபாய எச்சரிக்கை! செய்திகளின் தொகுப்பு
இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியது போல சர்வதேசத்தை ஏமாற்றலாம் என்று ராஜபக்ச அரசு நினைத்தால் அது மிகப்பெரும் தவறு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.
இன்று சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியதா இக்கட்டான நிலையிலேயே அரசாங்கம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த அரசு தனது தற்போதைய நிலைப்பாட்டிலிருந்து மாற வேண்டியது மிகவும் அவசியம் - மாறாவிட்டால் அரசின் எதிர்காலம் சாத்திமானதாக அமையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri