வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு வெளியானது முக்கிய அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகள் கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்று 14 நாட்களை கடந்திருந்தாலும், விமான நிலைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வெளியாகும் வரை தனிமைப்படுத்தலில் ஈடுபடுவது அவசியம் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும், இதனாலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சின், தனிமைப்படுத்தல் பிரிவின், விசேட சமுக வைத்திய நிபுணர் டில்ஹானி சமரசேகர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று, வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்பவர்கள் மேற்கொள்ள வேண்டி கோவிட் சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri