நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு? சவேந்திர சில்வா வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு
நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகவிலாளர் சந்திப்பின் போது, கோவிட் வைரஸ் பரவல் காரணமாக பயணங்களைக் கட்டுப்படுத்துவீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோவிட் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அனைத்து மக்களும் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,