யால வனப்பூங்காவில் இன்னும் சில வலயங்களைத் திறக்க நடவடிக்கை
யால வனப்பூங்காவின் இன்னும் சில வலயங்களைத் திறப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
யால வனப்பூங்காவிற்கு நாளாந்தம் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்பாடு
அதன் பிரகாரம் அரங்கமுவ என்றொரு புதிய வலயமும், தற்போதைக்கு மூடப்பட்டுள்ள மூன்றாம் மற்றும் நான்காம் வலயங்களும் வெகுவிரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படவுள்ளது.
குறித்த பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் தற்போது மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
யால வனப்பூங்காவானது சுமார் ஒரு லட்சம் ஹெக்டயார் பரப்பளவைக் கொண்டுள்ள போதும், சுற்றுலாப் பயணிகளுக்காக 25 ஆயிரம் ஹெக்டயார் பரப்பளவு மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பிரதேசம் ஆறுநுழைவாயில்களுடன் தனித்தனியாக ஆறுவலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
