கிளிநொச்சியில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் திருட்டு (Video)
கிளிநொச்சி தருமபுரம் பொதுச்சந்தை பகுதியில் அமைந்துள்ள வெற்றிலை வாணிபம் ஒன்றில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் திருடப்பட்டுள்ளது.
இந்த திருட்டு சம்பவம் நேற்றைய தினம் (09.02.2023) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து கடை உரிமையாளர் தெரிவிக்கையில்,
சம்பவ தினமான நேற்று (09.02.2023) தனது கடமைகளை முடித்து கடையை பூட்டி விட்டு சென்றதாகவும் மறுநாள் காலை அதாவது இன்றைய தினம் (10 .02 .2023) அதிகாலை 5.00 மணியளவில் வழமைபோன்று கடையினை திறப்பதற்காக வந்தபோது, கடையின் முற்றத்தில் நின்ற இருவர் தன்னை கண்டவுடன் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் கடையினை திறக்க முற்பட்டபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்த கடையின் உரிமையாளர், கடையினை திறந்து பார்த்தபொழுது அங்கு பெறுமதியான வானொலி பெட்டி ஒன்றும் இரண்டு லட்சத்துக்கு அதிகமான விலையில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த புகையிலை மற்றும் வெற்றிலை பீடி போன்ற பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

இது குறித்து , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்று எமது பகுதியிலோ அல்லது வேறு பகுதிகிலோ திருட்டு
சம்பவங்கள் இடம்பெறாதிருக்க சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் எனவும் இவர் மேலும் கூறியுள்ளார்.




விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam